Lord Siva

Lord Siva

Tuesday 17 January 2012

மனதினை சுத்தி செய்யும் பயிற்சி முறை

Posted On Jan 17,2012,By Muthukumar

இன்றைய யோகவகுப்புகள் அனைத்தும் மனதினை கட்டுப்படுத்தும் முறையினை சொல்லித்தருவதாகவும், உயர்ந்த தியானப்பயிற்சிகளை சொல்லித்தருவதாகவும் கூறிவருகின்றன. எப்படி இருப்பினும் பட்டம் பெறவேண்டுமென்றால் முதலாம் வகுப்பிலிருந்து ஒழுங்காக கற்று உயர் வகுப்புகள் தேறிய பின்னரே பல்கலைக்கழகம் செல்லமுடியும் என்பதுபோல் உயர்ந்த யோகப்பயீற்சிகள், தியானம் செய்வதற்கு முன்னர் அடிப்படை பயிற்சிகள் கட்டாயம் செய்யப்படவேண்டியவை என்பதனை அனேகமாக யோகம் பயில்பவர்கள், தியானம் பயில்பவர்கள் பறந்து விடுகின்றனர். ஒரு வீட்டிற்கு குடிபோகவேண்டுமென்றால் முதலில் வீட்டினை சுத்தப்படுத்தி வெள்ளையடித்து அழகு படுத்துவதுபோல் சித்த வித்தைக்கு அடிப்படையான மனதிற்கும் இவ்வாறனதொரு சுத்தி செய்யும், ஒழுங்க்குபடுத்தும் படிமுறை அவசியமாகும். இது இல்லாமல் எந்தவொரு மனப்பயிற்சியினையும் செய்ய ஆரம்பிப்பது தகுந்த ப்லனை தராது, ஏன் தெய்வ வழிபாட்டின் மூலம் பயன் பெறவேண்டும் என நினைப்பவர்கள் கூட இங்கு கூறப்படும் பயிற்சியினை செய்து வந்தால் துரிதமாக பலன் காணலாம். 

மனதினை சுத்தி செய்வது என்பது மனதில் எழும் உணர்ச்சிகளை உத்வேகங்களை கட்டுப்படுத்தி மனதை பயன் தரும் நேர் எண்ணங்களை (Positive thoughts) உருவாக்க செய்யப்படும் பயிற்சியாகும். பொதுவாக நம்மில் பலர் ஒரு விடயத்தினை தெரிய ஆரம்ப படிமுறையான கேள்வி கேட்கும் மேல்மனதை பழக்கப்படுத்திக்கொள்வதால் எப்போது நேர்மறை எண்ணங்களை (Negative thoughts) உருவாக்க பழகி விடுகிறோம், உதாரணமாக எமது மனம் நம்பினால் மூட நம்பிக்கையாக நம்பும், அல்லது சந்தேகப்பட்டால் முழுமையாக சந்தேகிக்கும், ஆனாம் நேர் எண்ணங்கள் என்பது சரியான விதத்தில் ஒரு விடயத்தினை ஆராய்ந்து, அது சரிவருமா இல்லையா என்பதனை துணிந்து, வரும் இடர்களை எதிர்பார்ப்புடன் சமாளித்து, அதன் பின் எந்த பின்வாங்கலும் இன்றி செய்துமுடிப்பது. ஆனால் மனம் வலிமையற்று இருக்கும் போது எப்போது துன்பமாகவும் எதிர்மறையாகவுமே எண்ணும். 

இந்த பயிற்சியினை செய்துவருவதன் மூலம் மனம் நேர் எண்ணங்களை உருவாக்குவதற்கு பழக்கப்படும். இதனால் மனம் சரியான விதத்தில் இயங்கி உங்களுக்கு காரிய வெற்றியினைத் தரும்.

பயிற்சி நிபந்தனைகள்
  • பயிற்சியினை உண்மையில் பலன் காணவேண்டும் என்ற சிரத்தையுடன் செய்யவேண்டும், 
  • தினசரி காலை மாலை குறித்த நேரத்தினை ஒதுக்கிகொண்டு அதே நேரத்தில் தொடர்ந்து செய்து வரவேண்டும்.
  • இடமும் ஒரே இடமாயிருத்தல் நன்று. 
  • பலன் தெரிவதற்கு குறைந்தது மூன்று மாதங்கள் தொடர்ச்சியாக பயிற்சிக்கவும், அதன் பின்பும் அனுதினம் உங்கள் சாதனையுடன், வழிபாட்டுடன் செய்துவரலாம். 

பயிற்சி:
காலை கிழக்கு திசை நோக்கியும், மாலை மேற்கு நோக்கியும் பார்த்து அமைதியாக உட்கார்ந்து கொள்ளவும். கால்களை மடித்து உட்காரக்கூடியவர்கள் சுகாசனம், பத்மாசனம், சித்தாசனம் இவற்றில் அமர்ந்து கொள்ளலாம், முடியாதவர்கள் சௌகரியமாக உட்கரக்கூடிய நாற்காலியிம் முதுதண்டு நேராக இருக்க கூடியவாறு அமர்ந்துகொள்ளவும். பிராணாயாமம் தெரிந்தவர்கள் சில முறை செய்துகொள்ளலாம், மற்றையவர்கள் மெதுவாக ஆழமான மூச்சு சிலதடவைகள் உள் இழுத்து வெளிவிட்டு தளர்ச்சியாக அமர்ந்து கொள்ளவும். பின்னர் (காலையிலாயின்) கிழக்கு திசையினை நோக்கி அமர்ந்து கொண்டு கண்களை மூடி கீழ்வரும் வாக்கியங்களை மனதில் உச்சரித்துக்கொண்டு, உங்கள் மூளையிலிருந்து உருவாகும் எண்ண அலைகள் கிழக்கு திசை பூராகவும் பரவுவதாக மனதில் பார்க்கவும், இவ்வாறு ஐந்து நிமிடங்கள் செய்தபின்பு, தெற்கு திசை நோக்கி திரும்பி ஐந்து நிமிடங்கள் மேற்கூறிய பாவனையினை செய்யவும், அதன்பின் மேற்கு, வடக்கு திசைகள் நோக்கியும் செய்யவும். மாலையில் மேற்கு தொடங்கி, வடக்கு, கிழக்கு, தெற்காக செய்து முடிக்கவும். 

பயிற்சியின் போது கூறவேண்டிய வாக்கியம்: 
"கிழக்கு திசையில் (மற்றைய திசைகளுக்கு அதன்படி மாற்றிக்கொள்ளவும்) உள்ள மனிதர்கள், ஜீவராசிகள், உயிரினங்கள், அனைத்தும் எப்போதும் நல்ல ஆரோக்கியத்துடனும், இன்பமாகவும் இருக்க வேண்டும், கிழக்கு திசை எப்போதும் நலமாக இருக்கட்டும்" 

இந்த பயிற்சி செய்யும் போது மனம் முழுமையாக விழிப்புணர்வுடன் குறித்த திசையில் ஒன்றி மனதாலோ, அல்லது வாயினாலோ கூறலாம்.

பலன்கள்
தொடர்ச்சியான பயிற்சியால் மூன்றுமாதங்களில் பலன் தெரியும், கீழ்வரும் அறிகுறிகள் மூலம் மனம் பலமடைந்து சுத்தியாகியுள்ளது என்பதனை அறிந்து கொள்ளலாம்
  • முன்னர் உங்களுக்கு இருந்து தீய உணர்வுகள் தற்போது அடிக்கடி மனதில் தோன்றுவது மறைந்திருக்கும் அல்லது குறைந்திருக்கும். 
  • அவற்றை தூண்டும் சந்தர்ப்பங்கள் சூழ் நிலைகள் ஏற்பட்டபோதும் அவை மனதில் குறித்த உணர்ச்சிகளை தூண்டியிருக்காது. 
  • வெறுப்புள்ள நபர்களை காணும்போது மனதில் அந்த உணர்ச்சி தோன்றாதிருத்தல். 
  • மனதில் அன்பு, பாசம், கருணை, இரக்கம் போன்ற உணர்வுகள் தோன்றுதல். 

இவற்றின் மூலம் உங்களது மனம் சுத்தியடைந்துள்ளதை அறிந்து கொள்ளலாம். இதன் பின் நீங்கள் செய்யும் எந்த சித்த வித்தை, மனப்பயிற்சிகளும் வெற்றியளிக்கும்.

முயற்சித்து பலன் பெறுங்க்கள்.

No comments:

Post a Comment