Lord Siva

Lord Siva

Monday 23 January 2012

மணவாழ்க்கையில் முறிவை ஏற்படுத்தும் உளவியல் தாக்கங்கள்..!!


இன்றைய திருமணம் எங்கு நிச்சயிக்கப்படுகிறதென்ற கேள் விக்கு விடை தேடும் முன்னரே வாழ்க்கை கேள்விக்குறியாகி விடுகிறது. நகலான நடை முறை வாழ்வுதான் எல்லாவ ற்றிலும் வியாபித்திருக் கிறது. நிலையான, கருத்தொருமித்த மணவாழ்வு நிலைத்து நிற்க தவமிருந்து பெறும் வரத்துக்குச் சமனாகிவிடுகிறது.
ஆண், பெண் என்ற இணைப்பில் கணவன், மனைவி என்ற உறவு எத்தனை வீதமானவை கலங்கமற்று ஜொலிக்கின்றன? எத்தனை வீதமானவை முலாம் பூசப்பட்டுத் தவிக்கின்றன?
அன்பு-அரவணைப்பு-விட்டுக்கொடுத்தல்-புரிந்துணர்வு-காதல்
இவைகளெல்லாம் எத்த னை சதவீதமானவை மண வாழ்க்கையில் கையெழு த்து இடுகின்றன என்பத னை விரல்விட்டு எண்ணி விடலாம். ஆனால், பெரும் பாலானவர்களின் வாழ்க் கையில் இவை எல்லாவ ற்றுக்கும் விடை கொடுத்து வெகுநாட்களா கின்றன. அபபடியானதொரு போலி வாழ்க்கை முறைதான் மண வாழ்வில் பெரும் பாலும் கலக்கப்படுகிறது.
இன்றைய வாழ்வின் முக்கிய இலட்சியமாகவிருப்பது, படிப்பது, வேலை செய்வது,திருமணம் செய்து கொள்வது, ஓர் இருப்பிடத்தை அமைத்துக் கொள்வது எனச் சுருங்கி விட்டது. அதனையும் மீறி பல உள்ளார்ந்த உணர்வு களைச் சென்றடையும் முன்னரே மனிதனின் இந்த அடிப்படைத் தேவைகளிலேயே காலமும் நேரமும் கரைந்து போய்விடுகிறது. மணவாழ்க்கை இணக்க மாக அமையாவிட்டால் வாழ்க்கையில் வெற்றி பெறு வது இயலாத ஒன்றாகிவிடும்.
தனக்காக, தன்குடும்பத்துக்காக உண்மையான அன்புடன் வாழ்வ தனை விட்டுவிட்டு பிறரின் மதிப்பு, கௌரவம், புகழுக்காக வாழும் இமிடேஸன் வாழ்க்கைiயும் மணமுறிவுக்கு முக்கிய காரண மாக அமைகிறது.
பெரும்பாலும் மணவாழ்க்கை யில் ஏனிந்த உறவு முறிவு? கண வன்- மனைவிக்கு இடையில் ஏனிந்த இடைவெளி? ஒரே படுக் கையில் விரோதிகளாக வாழ் வதனை விடத் தனித்து வாழ லாம் என்ற வெ றுப்பு உணர்வு எல்லாவற்றிலும் வியாபித்திருக்க என்ன காரணம்?
திருமணத்தில் வெற்றி கண்டவரும் திருமணத்தி;ல் கசப்பினை அனுபவிதத்வர்களுக்கும் இடையிலுள்ள வேறுபாடுகளை உளவியல் அடிப்படை யில் நோக்கினால் நட்புக்குத் தேவையான ஒத்த அக்கறைகள், விருப்பங்கள், ஆர் வங்கள், நோக்கங்கள் ஆகியவை திரு மண வெற்றிக்கு ஆதாரங்களாக விளங் குகின்றன. மேலும் மத நம்பிக்கை, பழக்க வழக்கங்கள், பழமையைப் பேணுவது வாழ்வின் தத்துவங்கள். நண்பர்கள்;, குழந்தைகளைப் பராமரித்தல், பொருளா தாரம் ஆகியவற்றில் மனம் ஒத்து இணை க்கமுடையவர் களாக இருக்கின்றனர்..
மகிழ்வற்ற மணவாழ்க்கைகை; கொண்ட வர்களிடம் கேட்டால் பெண்களிடமுள்ள ஆர்வம் எதிர்பார்ப்புகள், ஆசைகள், தாம்பத்தியம் பற்றிய எண்ண ங்கள் ஆகியன வேறுபட்டிருப்பதே குடும்ப முரண் பாட்டுக்கு காரணங்களாக கூறப்படும்.
சின்னச் சின்ன விடயங்களைக் கூடப் புரிந்து கொள்ள முடியாமை க்கு என்ன காரணம்? இப்படித் தான் வாழ வேண்டும் என்ற வரை யறை கரைந்து போய் விட்டதா? மேலும் குடும்ப உறவுகள் சீர்குலைவதற்கா ன உளவியல் ரீதியான காரணங்களைப் பார்த்தால் ஆண், பெண் இருபாலாருமே தங்களுக்கான எல்லையைக் கடந்து வரும் போது உறவுச் சிக்கலில் மாட்டிக்கொள்கிறார்கள். ஓர் ஆணின் மனநிலையும் பெண்ணின் மனநிலையும் முற்றிலும் மாறுபட்டவை.
நல்ல திருமணங்கள் எப்படித் தோற்றுப் போகும் என்ற கேள்விக்கு எளிதாக ஒரு விளக்கம் வேண்டுமென்றால,; வெளிப்பார்வைக்கு நல்லது போன்று தோன்றிய திருமணத்தின் உள்ளே சில குறிப்பிடத் தக்க குற்றங்களும் குறைபாடு களும் இருந்திருக்கக் கூடும் என்பது தான்.
ஒரு மண முறிவு அல்லது மண விலக்கு (divorce) நிகழ்கின்ற போது பொருந்தாத திருமணம் முறிந்து விட்டது என்று எண் ணுவதுதான் நடைமுறை வழ க்கு. ஆனால், எல்லா விதத் திலும் பொருத்தமாக அமைந்த திருமணம் கூட உடைந்து போகின்றனவே. அது ஏன்? சம்பந்தப்பட்ட வர்களின் எதிர்பார்ப்புகள் எல்லை மீறுவதே இதற்குக் காரணம். இந்த எல்லை மீறிய எதிர்பர்ப்பு மனக்குறையையும் அதிருப்தியை யும் ஏற்படுத்தலாம்.
மனக்குறைகள் எதனால் ஏற்படுகின்றன ?
மனக்குறைகள் எதனால் ஏற்படுகின்றன என்று பார்த்தால்,

1. எதிர்பார்ப்புகள் உயர்ந்து கொண் டே சென்று அதனை எட்டா முடியாத விடயம் என்றாகும் போது…
2. மணம் முடித்த ஆணும் பெண்ணும் சமுதாயத்துக்கு ஒரு தொகுப் பாகத் தென்பட்டாலும் உள்ளுக்குள் தாங் கள் இருவரும் வௌ;வேறு தனித் துவம் உடையவர்கள் என்று எண்ண த் தலைப்படும்போது…
3. மனைவி என்பவள் தன்னுடைய ஆளுகைக்கு உட்பட்டவள் என்ற நினைப்பு ஆண்டாண்டு காலமாக ஆணின் உள்ளத்தில் ஊறியுள் ளது. எவ்வளவுதான் பேச்சாற்றல், விழிப்புணர்வு என்று வந்தாலும் அதிலிருந்து வேறுபட்டு பெண்ணுக்குச் சாதகமாகச் சிந்திப்பதற்கு அவரின் மனம் இடம் தராதபோது..
4. தோற்றுப் போகும் திருமணத்தில் பாலுறவு பற்றிய எதிர்பார்ப்பு களும் அடங்குகிறது. ஒருவா மற்றவரின்; உள்ளுணர்வுகளை, உணர்ச்சிகளை அறிந்து வைத்திருக்காத போதுஸ
5. மணம் முடித்த கையுடன் (வேலை நிமித்தம்) அதிக காலம் பிரிந் திருப்பதும் நெறி தவறி வழி மாற இடமுண்டு. விவா கரத்துக்கு இது இடமளிக்கின்றபோது
6. அடுத்ததாக இளவயது திருமணங்களை எடுத்துக் கொள்ளலாம். சிறுவயதில் பொருத்தமில்லாத ஒருவரைத் திருமணம் செய்து கொள்கிறார்கள். ஆனால் குறிப்பிட்ட வயதுக்கு அப்புறம் அவர்களது ஆழ்மன விருப்பத்துக்கு ஏற்ற ஒருவரைப் பார்க்கும்போது மனம் தடுமாடுகிறார்கள். அதீ த எதிர்பார்ப்புடன் திருமண பந்தத்தை உரு வாக்கி அந்த எதிர்பார்ப்பு பூஜ்யமாகிப் போ கும்போது அடுத்த உறவை நாடுகிறார்கள். உளவியல் ரீதியான இந்தக் காரணங்க ளைத் தொடர்ந்து விவாகரத் துகளும் அதிகரித்து தனித்து வாழும் ஆண், பெண் எண்ணிக்கை களும் அதிகரித்து பிரச்சினைகளும் அதிகமாகும்.
7. கட்டாயத் திருமணம். கவர்ச்சி கலந்த கண்டதும் காதல். கல்வி, குடும்ப பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், ஏமாற்றங்கள், சந்தேகம் இவைகள் கூட இணைந்த வேகத்தில் பிரிவுக்கு வழியமைக்கி ன்றன.
பொதுவாக இருபது வயதுக்கு முன் திரு மணம் செய்பவர்களின் மண வாழ்க்கை வெற்றி பெறுவது அரிது. அதே போல் முப்பது வயதுக்கு மேல் மணம் புரியும் பெண்களும் 35 வயதுக்கு மேல் மணம் புரியும் ஆண்களும் நீடித்த மகிழ்வான மணவாழ்வு நடத்துவதில்லை என்று மணமுறிவு பற்றிய புள்ளி விபரங்கள் எடுத்துக் காட்டுகின்றன. எனவே, மண வாழ்வின் வெற்றிக்கு ஒரு குறிப்பிட்ட வயது சிறப்பாகக் கருதப்படுகிறது. அதற்கு மன எழுச்சி முதிர்ச்சியே அடிப்ப டையாக அமைகிறது.
மண வாழ்க்கை கசப்பதற்கும் முறிவதற்கும் இன்னுமொரு காரணி பொருளாதாரம். மணவாழ்வில் பொருளாதார வசதிகள் அதிகம் பங்கு பெறாத நிலையில் கடன், வேலை இல்லாத் திண் டாட்டம் இவைகளும் சிக்க லை ஏற்படுத்தலாம். அதே நேரம், குடும்பத்து க்காக உழைக்கிறேன் என்ற நாமத் துடன் பணம், பணம் என்று ஓடி ஓடி உழைத்து குடும்ப த்தை ஒரு வங்கியாக நினை க்கும் பட்சத்தில் மனைவி, பிள்ளைகள் தூரமாகி பணம் மாத்திரம் அருகில் துயில் கொள்ளும் நிலையே ஏற்படும். கணவனிடம்தான் அன்பு, அரவணைப்பு, ஆறு தல், உடல் ;சார்ந்த தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள முடியும். அவனே எட்டாத தூரத்தில் இருக்கும் பட்சத்தில் மனைவியான வளின் எண் ணங்கள், அபிலாஷைகள், எதிர் பார்ப்பு கள் அனை த்தையும் யாரிடம் போய் சொ ல்ல முடியும்? அவள் மூன்றாம் நபரின் அன்பை நாடுவதும் வாழ்க்கையின் ஒரு வித துரதிர்ஷ்டம்தான். தனிமை, பிரிவு, பிரச்சினைகள் தலைதூக்கு கின்றன.
மேலும் மணவாழ்வு பொருத்தத்தில் கண வனும் மனைவியும் அவர்கள் கற்ற கல்வி த்துறையில் சமத்துவத் தன்மையுடன் காணப் பட்டால் மகிழ்சி பெருகும். உயர்ந்த கல்வியும் மணவாழ்வுக்கு மகிழ்சி அளிக் கக்கூடியது.
அடுத்தாக, விவாதங்கள், பொறாமை, ஒழுக்கமின்மை போன்றவற் றால் மணவாழ்வில் துன்பமே மிகுதியாக இருக்கிறது. என்று 1500 வரலாறுகளை ஆராய்ந்த அமெரிக்க சமூகப் பணி நிறுவனத்தின் ஆராய்;ச்சி எடுத்துக் காட்டுகிறது. ஒன்பது சத வீதத்தினர் பொறாமை யினாலும் முப்பது சத வீதத்தினர் ஒழுக்கமின்மையாலும் நாற்ப த்தியொரு சதவீதத்தினர் தூற்றுதலி னாலும் தங்கள் மண வாழ்வு முறிந்ததாகக் குறிப்பிட்டுள்ளனர். மேலும், கணவன்- மனைவி இரு வரில் ஒருவர் தாம்பத்திய வாழ்க் கையில் அதிக நாட்டம் உள்ள வராக இருந்து மற்றொருவர் அந்த நாட்டத்துக்கு இணையான ஜோடி யாக இல்லாமல் போகும்போதுதான் பிரச்சி னைகள் பூதாகரமாக எழுகின்றன. விரிசல்கள் ஆழமாகின்றன. அந்தரத்துக்கும் அன்புடன் நேரத்தை ஒதுக்குவதும் மணவாழ்வை வெல்லும் வழி.
ஆகவே, அடிப்படையான வாழும் கலையைக் கற்றுக் கொண்டால் மணவாழ்வு இனிமை சேர்க்கும். பொதுவாக பொருத்தமான திரு மணமானாலும் பொருந்தாத திருமணமானாலும் நிறைவேறாத ஆசைகளைக் கணக்கில் கொண்டு எடைபோட்டோமேயானால் எந்தத் திருமணமும் ஈடுகொடுக்காது. எல்லோருடைய வாழ்விலும் இன்பங்களும் துன்பங்களும் ஏற்ற த் தாழ்வுகளும் கருத்து முரண் பாடுகளும் உள்ளன. அவற்றை ஈடு செய்து கொண்டு போவதுதான் அறிவுடமை.
முதலில் வீடு வீடாக இருக்க வேண்டும். நீதிமன்றமாக மாறக் கூடாது. சட்டங்கள் இயற்றி கணவனோ மனைவியோ வழக்கறிஞ ராகவும் நீதிபதியாகவும் மாறக் கூடாது. அதன் முடிவுகள் தீர்ப்புகள் திருத்தப்படா மலேயே மனமுறிவுக்கான தண்டனையை அனுபவிக்க நேரிடும். ஆகவே, அனைத் தினையும் சமாளித்துச் செல்வோம் என்ற எண்ணம் உறுதியாகின்ற போது திருமண ங்கள் தோற்றுப் போக மாட்டாது.

No comments:

Post a Comment